ADDED : ஜூலை 10, 2026 05:45 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோட்டில்
இருந்து இன்று மதியம், 2:35 மணிக்கு ஒரிசா மாநிலம் சம்பல்பூர் வரை
செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் புறப்படுகிறது.
சேலத்துக்கு, 3:40
மணிக்கும், ஜோலார்பேட்டைக்கு மாலை, 5:58 மணிக்கும் செல்கிறது.
சனிக்கிழமை நள்ளிரவு, 11:15 மணிக்கு சம்பல்பூரை சென்றடைகிறது.
காட்பாடி, பெரம்பூர், கூடூர், நெல்லுார், ஓங்கோல், விஜயவாடா,
ராஜமுந்திரி, சாமல்கோட், கோட்டவலசு, பாப்பிலி, ராயகடா, பாலான்கீர்
வழியாக செல்கிறது. பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரயில்
இயக்கப்படுவதாக, தென்னக ரயில்வே சேலம் கோட்டம் அறிவித்துள்ளது.
