/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நிதி தாமதம் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் போராட்டம்

ADDED : ஆக 20, 2025 01:18 AM
ஈரோடு, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம், வருவாய் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம். ஆனால் திட்டத்தை ஊரக வளர்ச்சி துறையிடம் வழங்கி, வழக்கமான பணிக்கு இடையே கால அவகாசம் கூட வழங்காமல் அரசு நிர்பந்திப்பதாக, இத்துறை அலுவலர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் முகாமுக்கான செலவினங்களுக்கு முறையான மற்றும் முழுமையான நிதியை விடுவிக்காததால் திணறி வருவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
இதை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கம் சார்பில், மாநில அளவில் நேற்று கறுப்பு பட்டை அணிந்து, ஊழியர்கள் பணி செய்தனர்.
மாலையில் கலெக்டர் அலுவலகம் மற்றும் யூனியன் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன், ஒருங்கிணைப்பாளர்கள் சேகர், மோகன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதேபோல் டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கோபி யூனியன் அலுவலகம்,
அந்தியூர் யூனியன் அலுவலகம், நம்பியூர் யூனியன் அலுவலகத்தில் ஊழியர்கள் போராட்டத்தில்
ஈடுபட்டனர்.