/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வரும் 9ல் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்
/
வரும் 9ல் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்
ADDED : ஆக 07, 2025 01:09 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் வரும், 9ல் சத்தியமங்கலம் தாலுகா, சிக்கரசம்பாளையம் பஞ்சாயத்து புதுவடவள்ளி, பண்ணாரி சாலை, தி நெஸ்ட் உயர்நிலைப்பள்ளியில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் உயர் மருத்துவ சேவை முகாம் நடக்க உள்ளது.
ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை முகாம் நடக்கும். ஈரோடு மாவட்டத்தில், 14 வட்டாரங்களில் ஒரு வட்டாரத்துக்கு, 3 முகாம் என, 42 முகாம், ஈரோடு மாநகரில், 3 முகாம் என, 45 முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இங்கு முழு உடல் பரிசோதனை, பிரஷர், நீரழிவு நோய், நுரையீரல், சிறுநீரக ஆய்வக பரிசோதனை, எக்ஸ்ரே உட்பட பல பரிசோதனை, பல உறுப்புக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கப்படுகிறது. 17 வகை சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்கின்றனர்.
கடந்த, 2ல் நடந்த முகாமில், 441 ஆண்கள், 522 பெண்கள், 62 குழந்தைகள், தொழிலாளர் நலத்துறை மூலம், 346 பேர் உட்பட, 1,706 பேர் சிகிச்சை பெற்றனர். இம்முகாமில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில், 29 பேருக்கு மருத்துவ அட்டை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், 24 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இ.சி.ஜி., - 788 பேர், ஆய்வக பரிசோதனை, 823 பேர், ஸ்கேன், 49, எக்ஸ்ரே - 60 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவ பரிசோதனை அடிப்படையில், 223 பேர், மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றனர்.