/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயம் காளைக்கு சிலை; அமைச்சரிடம் மனு
/
காங்கேயம் காளைக்கு சிலை; அமைச்சரிடம் மனு
ADDED : ஜன 06, 2025 02:47 AM
காங்கேயம்: காங்கேயத்தில் காளை சிலை அமைப்பது தொடர்பாக, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோரிடம், திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலையில், காங்கேயம் காளை சிலை அமைப்பு சங்கத்தினர் கோரிக்கை மனு அளிக்கப்-பட்டது.
காங்கேயம் காளை சிலை அமைப்பு சங்க தலைவர் கார்த்திகேயன், துணைதலைவர் ரவி, செயலாளர் சண்முகசுந்தரம், துணை செயலாளர் சிவராஜா, பொருளாளர் சக்திகுமார் மனு அளித்தனர்.மனு விபரம்: காங்கேயத்தில் விவசாய பெருமக்களின் பாரம்பரிய-மிக்க காங்கேயம் காளை சிலை அமைக்க பல வருடங்களாக கோரிக்கை உள்ளது. காங்கேயம் மக்களின் நீண்டகால கோரிக்-கையை ஏற்று, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சரால் பொதுப்பணித்துறை அமைச்சருக்கு, 10.08.21 அன்று காங்-கேயம் காளை சிலை அமைக்க கடிதம் அளிக்கப்பட்டது. பொது இடங்களிலும் சிலை அமைப்பதற்கு உச்சநீதிமன்ற வழிகாட்டு முறை குறிப்பிடப்பட்டுள்ளதால், சிலை அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டு வருவதாக தெரிய வருகிறது.
இந்நிலையில் அமைச்சர் சாமிநாதனின் தொடர் முயற்சியால், சிலை அமைப்பதற்கான நிபுணர்கள், காங்கேயத்தில் ஆய்வு நடத்-தினர். சிலை மாதிரிகள் தயாரிக்க ஏற்பாடு நடந்து வருகிறது. சிலையை, போர்கால அடிப்படையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.