/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பள்ளிக்கு செல்ல விருப்பமின்றி கடத்தல் நாடகமாடிய மாணவன்
/
பள்ளிக்கு செல்ல விருப்பமின்றி கடத்தல் நாடகமாடிய மாணவன்
பள்ளிக்கு செல்ல விருப்பமின்றி கடத்தல் நாடகமாடிய மாணவன்
பள்ளிக்கு செல்ல விருப்பமின்றி கடத்தல் நாடகமாடிய மாணவன்
ADDED : ஜூலை 16, 2025 01:24 AM
அந்தியூர், அந்தியூர் அருகே தவிட்டுப்பாளையத்தை சேர்ந்த, 16வயது மாணவன், பருவாச்சி பகுதியில் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். நேற்று காலை வழக்கம் போல் வீட்டில் இருந்து பள்ளி பஸ்ஸில் கிளம்பி சென்றார். மதியம், 1:௦௦ மணிக்கு, பெற்றோருக்கு போன் செய்து, 'என்னை வட மாநிலத்தவர்கள் கடத்தி சென்று விட்டனர். அவர்களிடமிருந்து தப்பி, ஈரோட்டிலிருந்து பஸ்ஸில் வந்து கொண்டிருக்கிறேன்' என்று கூறியுள்ளார். இதனால் பதற்றமடைந்த பெற்றோர், அந்தியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஒரு மணி நேரத்தில் அந்தியூர் வந்த மாணவனை அழைத்துக் கொண்டு ஸ்டேஷனுக்கு பெற்றோர் சென்றனர். போலீசார் விசாரித்தில், பவானி ரோட்டில் நடந்து சென்றபோது, வட மாநிலத்தவர்கள் காரில் வந்து கடத்தியதாக கூறினார்.
மாணவனை அழைத்துக் கொண்டு, பவானி ரோட்டில் கடத்தியதாக கூறப்பட்ட இடத்திலிருந்த 'சிசிடிவி' கேமராக்கள் மற்றும் பவானி ரோட்டில் கடைகளில் வைக்கப்பட்ட கேமராக்களை ஆய்வு செய்தனர். எந்த கேமராவிலும் அதுபோன்ற காட்சி இல்லை. இதனால் மாணவனை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
'பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாத நிலையில் கடத்தல் நாடகமாடினேன். அந்தியூரிலிருந்து ஈரோடு பஸ் ஸ்டாண்ட் வரை சென்று, மீண்டும் திரும்பி வந்தேன்' என்றும் தெரிவித்தார். மாணவனுக்கு அறிவுரை கூறிய போலீசார், அவனை திட்ட வேண்டாம் என்று பெற்றோரிடம் அறிவுறுத்தி ஒப்படைத்தனர்.