ADDED : செப் 28, 2026 06:08 AM
ஈரோடு:மொடக்குறிச்சி
அவல் பூந்துறை பூவாண்டிவலசை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகள் அபி, 17;
ரங்கம்பாளையத்தில் கல்லுாரியில் முதலாமாண்டு படிக்கிறார்.
கடந்த,
25ம் தேதி காலை கல்லுாரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அபியுடன்
படிக்கும் நாச்சிவலசை சேர்ந்த மாணவி கீர்த்தனா, 18; இவருக்கு
ராமகிருஷ்ணன் போன் செய்தார். அவரது போனும் சுவிட்ச் ஆப் ஆகி
இருந்தது. இருவரும் மாயமாகி இருக்கலாம் என கருதப்படுகிறது.
இதேபோல் கீர்த்தனாவின் தாத்தா வேலுசாமியும் பல இடங்களில் தேடியும்
பேத்தி குறித்து தகவல் இல்லை. இருவரும் அளித்த புகாரின்படி அறச்சலுார்
போலீசார் தேடி வருகின்றனர்.* திருப்பூரை சேர்ந்த ஆனந்தி மகள்
கீர்த்தனா, 19; சித்தோடு அரசு இன்ஜினியரிங் கல்லுாரியில்,
விடுதியில் தங்கி இரண்டாமாண்டு படிக்கிறார். இந்நிலையில் நேற்று
முன்தினம் மாயமாகி விட்டார். ஆனந்தி புகாரின்படி சித்தோடு போலீசார்
தேடி வருகின்றனர்.
