/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு பஸ்சில் மாணவர்கள் அடாவடி அந்தியூரில் போக்குவரத்து பாதிப்பு
/
அரசு பஸ்சில் மாணவர்கள் அடாவடி அந்தியூரில் போக்குவரத்து பாதிப்பு
அரசு பஸ்சில் மாணவர்கள் அடாவடி அந்தியூரில் போக்குவரத்து பாதிப்பு
அரசு பஸ்சில் மாணவர்கள் அடாவடி அந்தியூரில் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூலை 16, 2025 01:24 AM
அந்தியூர், அந்தியூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து கோபிக்கு செல்லும், 20-சி அரசு டவுன் பஸ் நேற்று மாலை, 6:30 மணிக்கு புறப்பட்டது. பஸ்ஸில் ஏறிய அரசுப்பள்ளி மாணவர்கள், படியில் தொங்கியவாறு பயணம் செய்தனர். இதை கவனித்த டிரைவர் மற்றும் கண்டக்டர், உள்ளே வருமாறு அறிவுறுத்தினர். ஆனால், பேச்சை கேட்காமல் அபாய பயணத்தை தொடங்கினர்.
இதனால் அந்தியூர்-தவிட்டுப்பாளையம் இணைப்பு பாலத்தில், டிரைவர் பஸ்ஸை நிறுத்தி கண்டித்தார். அப்போதும் உள்ளே செல்ல முடியாது என்று மாணவர்கள் கூறவே, அந்தியூர் போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. அங்கு சென்ற போலீசார், மாணவர்களை உள்ளே செல்ல அறிவுறுத்தினர். அதன் பிறகே மாணவர்கள் உள்ளே சென்றனர். இதனால் அப்பகுதியில், ௨௦ நிமிடத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.