/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பி.டி.ஓ.,விடம் குடிநீர் கேட்டு மனு வழங்கல்
/
பி.டி.ஓ.,விடம் குடிநீர் கேட்டு மனு வழங்கல்
ADDED : ஆக 30, 2025 01:17 AM
பவானி, அம்மாபேட்டை அருகே சிங்கம்பேட்டை பஞ்., ஆட்டக்காலனுாரில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இப்பகுதியில் ஆற்று குடிநீர் வசதி இல்லை. அதனால் ஆட்டக்காலனுார் ஓம்காளியம்மன் கோவில் அருகில், ஆழ்துளை குழாய் கிணறு அமைத்து, 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள குடிநீர் மேல்நிலைத்தொட்டியில் நீரேற்றம் செய்து, அதிலிருந்து குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
கடந்த ஒரு மாதமாக, இப்பகுதியில் உள்ள குழாய்களில் பழுது ஏற்பட்டு தணணீர் வருவதில்லை. இதையடுத்து, பழுதடைந்த மின்மோட்டரை சரி செய்வதற்காக கழட்டி சென்று பஞ்., நிர்வாகத்தினர், 20 நாட்களாகியும் இதுவரை சரி செய்யவில்லை. இதனால் இப்பகுதி மக்கள், அம்மாபேட்டை யூனியன் அலுவலக பி.டி.ஒ.,கதிரேசனிடம் விரைவில் குடிநீர் வழங்க கோரி மனு அளித்தனர்.