/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'கீழ்பவானியில் கூடுதல் நீர் திறக்க பரிந்துரை' வேளாண் குறைதீர் கூட்டத்தில் பதில்
/
'கீழ்பவானியில் கூடுதல் நீர் திறக்க பரிந்துரை' வேளாண் குறைதீர் கூட்டத்தில் பதில்
'கீழ்பவானியில் கூடுதல் நீர் திறக்க பரிந்துரை' வேளாண் குறைதீர் கூட்டத்தில் பதில்
'கீழ்பவானியில் கூடுதல் நீர் திறக்க பரிந்துரை' வேளாண் குறைதீர் கூட்டத்தில் பதில்
ADDED : அக் 26, 2024 07:44 AM
ஈரோடு: ஈரோட்டில், மாவட்ட வேளாண் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலை-மையில் நடந்தது.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: கீழ்ப-வானி வாய்க்கால் சேதமடைந்து சில நாள் தண்ணீர் நிறுத்தப்பட்டது. பருவமழை தாமதமா-னதால், நடவுப்பணிகளும் தாமதமானது. டிச., 15ல் தண்ணீர் நிறுத்தாமல் ஜன., முதல் வாரம் வரை விட வேண்டும். 2ம் பருவத்துக்கு முன்ன-தாகவே தண்ணீர் திறப்பை அறிவித்தால், கடலை சாகுபடி செய்வோர் முன்னதாகவே திட்டமிடு-வார்கள். மரவள்ளி கிழங்குக்கு விலை இல்லை. அரசு பேச வேண்டும். பருவமழை பெய்வதால், 2ம் போகத்துக்கு தேவையான புதிய விதைகளை வேளாண் துறை பிற இடங்களில் வாங்கி வழங்க வேண்டும். உரக்கடைகளில் யூரியா, பொட்டாஷ் உரங்கள் தட்டுப்பாடாக உள்ளது. பிற உரம், விதையை வாங்கினால் தான் தருகின்றனர். அதுவும் கூடுதல் விலை வைக்கின்றனர். தடப்-பள்ளி - அரக்கன்கோட்டை பாசன கால்வாயில் ஷட்டர்களை சீரமைக்க வேண்டும். கீழ்பவானி வாய்க்காலில் ஆக்கிரமிப்பை அகற்ற தனி தாசில்தாரை நியமிக்க வேண்டும். நொய்யல் ஆற்றில் தண்ணீர் சென்றாலும், அதில் உள்ள ரசாயன தன்மையை வேளாண் துறை ஆய்வு செய்து அறிவித்தால், அதற்கேற்ப பயிர்களை சாகுபடி செய்யலாம்.
பதில் அளித்து, நீர் வள, வேளாண் துறை அதி-காரிகள் பேசியதாவது: தடப்பள்ளியில், 448 மதகு ஷட்டரில், 50 ஷட்டர்கள் சீபேஜ் வெளியேறுகி-றது. அதை சீரமைக்க உள்ளோம். கீழ்பவானியில் கூடுதல் நாள் தண்ணீர் திறக்க, இறுதி நேரத்தில் அரசிடம் பரிந்துரைக்கப்படும். காளிங்கராயன் வாய்க்காலில் மேலும், 3 கி.மீ.,க்கு கான்கிரீட் தளம் அமைக்க அரசுக்கு பரிந்துரைத்துள்ளோம். நிலக்கடலை உள்ளிட்ட புதிய பயிர் விதைகள், ஆந்திரா, குஜராத்தில் இருந்து வாங்கி இங்கு வினியோகிக்க அரசு பரிந்துரைக்கவில்லை. நல்ல ரக விதைகள் வாங்கி தருகிறோம். யூரியா உள்ளிட்ட உரம் தட்டுப்பாடு பற்றி ஆய்வு செய்-யப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.