ADDED : அக் 11, 2026 04:58 AM
ஈரோடு:ஈரோடு
அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா அருகில், சுப்ரீம் மொபைல்ஸ்,
எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமை, அமைச்சர் விஜய் பாலாஜி திறந்து வைத்தார்.
நிகழ்வில் ஆனந்த்மோகன் எம்.எல்.ஏ., குத்துவிளக்கு ஏற்றினார்.
திருப்பூர்
பி.என்.ஐ., செயல் இயக்குனரும், ஸ்ரீசெந்தில் ஆட்டோ நிறுவனருமான
மகேஸ்வரன், முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். மீனா குழும
நிறுவனங்களின் தலைவர் லலித் ஜெயின், பி.பீ.ஏஜென்சிஸ் பாலு ஆகியோர்,
சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். திறப்பு விழா குறித்து
சுப்ரீம் மொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ் ஷோரூம் நிறுவன தலைவர்கள்
ராதாகிருஷ்ணன், செல்வராஜ் கூறியதாவது:-
கடந்த, 25 ஆண்டுகளாக
மொபைல்போன் விற்பனையில் மக்களின் நன்மதிப்பை பெற்ற சுப்ரீம்
நிறுவனத்தின் புதிய மொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ் ஷோரூம் ஈரோட்டில்
திறக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ரூ.58 ஆயிரம் மதிப்பிலான சிங்கிள்
டோர் பிரிட்ஜ், டாப் லோடு வாஷிங் மெஷின், பட்டர்பிளே மிக்சி ஆகியன, 28
ஆயிரத்து, 990 ரூபாய்-க்கு காம்போ ஆபராக வழங்கப்படுகிறது.
த்ரீ
ஸ்டார் ஏ.சி., மெஷின் வாங்கினால், 3,200 ரூபாய் மதிப்பு ஸ்டெபிளைசர்,
2,499 ரூபாய் மதிப்பு ஸ்மார்ட் கடிகாரம், 1,000 ரூபாய் மதிப்பு சுப்ரீம்
கிப்ட் வவுச்சருடன் இலவசமாக வீட்டில் பொருத்தி தரப்படும். மேலும்
வாடிக்கையாளர்களுக்கு இ.எம்.ஐ., வசதியும் செய்து தரப்படுகிறது.
பழைய மொபைல்போன் மற்றும் லேப்டாப்புக்களுக்கு சிறந்த எக்ஸ்சேஞ்ச் விலை
உண்டு. இவ்வாறு கூறினர்.
