/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிவன்மலையில் இன்று தைப்பூச தேரோட்டம்
/
சிவன்மலையில் இன்று தைப்பூச தேரோட்டம்
ADDED : ஜன 26, 2024 10:06 AM
காங்கேயம்: சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், நடப்பாண்டு தைப்பூச தேர்த் திருவிழா, கடந்த, 17ம் தேதி மலை அடிவாரத்தில், வீரகாளியம்மன் கோவிலில் துவங்கியது. 20ம் தேதி முருகன் கோவில் சன்னதி முன் கொடி ஏற்றப்பட்டது. பின்பு மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு சுவாமி எழுந்தருளினார். இதையடுத்து தினமும் காலையில், காலசாந்தி திருக்கோவில் மற்றும் பல்வேறு சமூக மக்களின் சார்பில் மண்டபக்கட்டளை நடந்தது.
விழா முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது. திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டு தெற்கு ரத வீதியை கடந்து, கிரிவலப் பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது. நாளை மாலை இரண்டாம் நாள் தேரோட்டம் நடக்கிறது. 28ம் தேதி மலையை வலம் வந்து, தேர் நிலை அடைகிறது. 31ம் தேதி தெப்ப உற்சவம், பரிவேட்டை நடக்கிறது. பிப்., 1ம் தேதி மதியம் மஹா தரிசனம் நடக்கிறது. பிப்.,4ம் தேதி இரவு கொடியிறக்குதல் மற்றும் பாலிகை நீர்த்துறை சேர்த்தலுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது.

