/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பணியாளர்களுக்கு 3 வேளை உணவு திட்டம் தமிழ்நாடு துாய்மை பணியாளர் சங்கம் எதிர்ப்பு

ADDED : அக் 30, 2025 02:44 AM
ஈரோடு, துாய்மை பணியாளர்களுக்கு, தினமும் மூன்று வேளை உணவு வழங்கும் திட்டத்தை, முதல்கட்டமாக சென்னை மாநராட்சியில் தமிழக அரசு செயல்படுத்த உள்ள நிலையில், இத்திட்டத்திற்கு தமிழ்நாடு துாய்மை பணியாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்க மாநில தலைவர் சண்முகம் கூறியதாவது:
தொழிலாளர் சட்டத்தின்படி, துாய்மை பணியாளர்களை இரண்டு ஆண்டுகளில், 480 நாட்கள் பணி முடித்திருந்தால் பணி வரன்முறை, பணி பாதுகாப்பு, ஊதிய உயர்வு உட்பட அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக, தொழிலாளர்களை பண்ணை அடிமைக்கு கொண்டு செல்லும் விதமாக, மூன்று வேளை உணவு வழங்கும் திட்டம் கொண்டு வந்துள்ளனர். இத்திட்டம் பிற்போக்குத்தனமான செயலாகும்.
சட்ட நடைமுறைகளை செயல்படுத்தாமல், தொழிலாளர்களை வஞ்சிக்க கூடியதாக திட்டம் உள்ளது. மற்ற துறைகளில் பணிபுரிபவர்களுக்கு பணி நிரந்தரம் உட்பட அனைத்து சலுகைகளும் வழங்கும் தமிழக அரசு, துாய்மை பணியாளர்களுக்கு மட்டும் மூன்று வேளை உணவு அளிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். பணி நிரந்தரம் செய்து ஊதியம் வழங்கினால் துாய்மை பணியாளர்கள் குடும்பம் முன்னேறும். எனவே, தமிழக அரசு இத்திட்டத்தை கைவிட்டு, துாய்மை பணியாளர்களுக்கு பணி வரன்முறை, பணி பாதுகாப்பு, ஊதிய உயர்வு உட்பட அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.