/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வரும் ஆண்டுக்கு ரூ.30,257.99 கோடிக்கு கடன் வழங்க இலக்கு
/
வரும் ஆண்டுக்கு ரூ.30,257.99 கோடிக்கு கடன் வழங்க இலக்கு
வரும் ஆண்டுக்கு ரூ.30,257.99 கோடிக்கு கடன் வழங்க இலக்கு
வரும் ஆண்டுக்கு ரூ.30,257.99 கோடிக்கு கடன் வழங்க இலக்கு
ADDED : மே 29, 2025 01:40 AM
ஈரோடு,
ஈரோட்டில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி, மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு தயாரித்த, 2025-26ம் நிதியாண்டுக்கான ஆண்டு கடன் திட்ட அறிக்கை வெளியிட்டனர்.
இதில் விவசாயத்துக்கு, 18,917.01 கோடி ரூபாய் கடன், சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு, 10,551.28 கோடி ரூபாய் கடன், பிற முன்னுரிமை துறைகளுக்கு, 788.70 கோடி ரூபாய் கடன் என, மொத்தம், 30,257.99 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இது கடந்தாண்டு இலக்கைவிட, 3,995.18 கோடி ரூபாய் (15.21 சதவீதம்) அதிகமாகும்.
ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் விஜய் விக்னேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விவேகானந்த், கனரா வங்கி பிராந்திய உதவி பொது மேலாளர் சரவணன், நபார்டு வங்கி பொது மேலாளர் அசோக்குமார், மாவட்ட தொழில் மைய மேலாளர் திருமுருகன், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் பாஸ்கர், தாட்கோ மேலாளர் அர்ஜூன் உட்பட பலர் பங்கேற்றனர்.