பணி நிரந்தரம் செய்ய கோரி டாஸ்மாக் ஊழியர் தீர்மானம்
பணி நிரந்தரம் செய்ய கோரி டாஸ்மாக் ஊழியர் தீர்மானம்
ADDED : ஜூன் 27, 2026 01:13 AM
ஈரோடு; பணி நிரந்தரம் கோரிய வழக்கில் வெற்றி பெற்ற, சி.ஐ.டி.யு., டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின், சிறப்பு பேரவை கூட்டம் ஈரோட்டில் நடந்தது. சங்க தலைவர் முருகையா தலைமை வகித்தார். பொருளாளர் அர்த்தநாரீஸ்வரன், சம்மேளன குழு உறுப்பினர் பொன்பாரதி முன்னிலை வகித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில், 150க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இதில் நுாற்-றுக்கணக்கான மேற்பார்வையாளர், விற்பனை-யாளர், உதவி விற்பனையாளர்கள் பணி செய்-கின்றனர். கடந்த, 2004 முதல் பணியாற்றும் இவர்களுக்கு நிரந்தரப்பணி வழங்கப்படவில்லை. எனவே சி.ஐ.டி.யு., சார்பில் பணி நிரந்தரம் கோரி தொட-ரப்பட்ட வழக்கில், பணி நிரந்தரம் செய்ய உத்தர-விட்டு, தொழிலாளர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி-யது.
இதை தொழிலாளர் நலத்துறை ஏற்று, டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிடக்கோரி தீர்-மானம் நிறைவேற்றப்பட்டது.
23 ஆண்டு உழைப்புக்கு பின், 24ம் ஆண்டு ஊதிய உயர்வு பெற்ற மேற்பார்வையாளர்கள், 17,850 ரூபாய், விற்பனையாளர்கள், 15,530 ரூபாய், உதவி விற்பனையாளர்கள், 14,340 ரூபாய் மட்-டுமே சம்பளமாக பெறுகின்றனர். அவர்களுக்கான ஊதியத்தை உடன் உயர்த்தி வழங்க தீர்மானம் நிறைவேற்றினர்.
