ADDED : அக் 16, 2026 06:48 AM

ஈரோடு:தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் சார்பில், ஈரோடு சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கிளை சார்பில், கல்லுாரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கழக துணை தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர்கள், கல்லுாரி ஆசிரியர்கள், 10 முதல் 18 ஆண்டுக்குள் பணிபுரிந்து ஓய்வு பெறும்போது, இறுதியாக வாங்கிய சம்பளத்தில், 30 சதவீதம் இடைக்கால பென்ஷனாக வழங்க வேண்டும் என்ற அடிப்படையில், நான்கு மாதங்கள் மட்டும் வழங்கப்பட்டது. இந்நிலையில் மாதம், 10 ஆயிரம் ரூபாய் மற்றும் அகவிலைப்படி மட்டுமே வழங்குகின்றனர். சி.பி.எஸ்.,சில் பிடித்தமே ரூ.70 லட்சம் வரை உள்ளது. ஆனால் ஏற்கனவே இடைக்கால பென்ஷன் தொகையில் இருந்து பிடித்தம் செய்ய முயன்று வருகின்றனர். இடைக்கால பென்ஷன் சதவீத தொகையை வழங்க மறுக்கின்றனர். அரசின் இந்த செயலை கண்டித்தும், உத்தரவை வாபஸ் பெற்று இடைக்கால பென்ஷனை வழங்க வலியுறுத்தியும், 13 பெண்கள் உள்ளிட்ட 30 பேர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
