sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காதில் பூ வைத்து ஆசிரியர்கள் ஈரோட்டில் நுாதன போராட்டம்

/

காதில் பூ வைத்து ஆசிரியர்கள் ஈரோட்டில் நுாதன போராட்டம்

காதில் பூ வைத்து ஆசிரியர்கள் ஈரோட்டில் நுாதன போராட்டம்

காதில் பூ வைத்து ஆசிரியர்கள் ஈரோட்டில் நுாதன போராட்டம்


ADDED : செப் 26, 2024 02:36 AM

Google News

ADDED : செப் 26, 2024 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தகுதி தேர்வில், 2013-ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நிய-மனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஆசி-ரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஈரோடு காளை மாட்டு சிலை பகுதியில், 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் சார்பில், காதில் பூ வைத்து நுாதன போராட்டம் நேற்று நடத்தப்பட்டது.

மாநில தலைவர் வடிவேல் சுந்தர் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன், துணை அமைப்பாளர் தினேஷ் பாபு முன்னிலை வைத்தனர். அரசு தங்களது கோரிக்-கையை நிறைவேற்றாததை கண்டித்து, ஆசிரியர்கள் காதில் பூ வைத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு சிலர் நெற்-றியில் ரூபாய் நோட்டு கட்டிக்கொண்டு, பணம் கொடுத்தால் தான் பதவி

கிடைக்குமா? என்ற கோஷத்தை எழுப்பி எதிர்ப்பை தெரிவித்தனர். ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், திருப்பூர், கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த ஆசிரி-யர்கள் கலந்து

கொண்டனர்.சங்க நிர்வாகிகள் கூறியதாவது:- கடந்த, 2013ல் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோம். சான்றிதழ் சரிபார்ப்பும் நிறைவடைந்தது. ஆனால், 11 ஆண்டுகளாக பணி நியமனம்

வழங்கப்படாமல் உள்ளது. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடு-பட்டபோது, அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின், எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரி-வித்தார். தி.மு.க.,

ஆட்சி அமைந்ததும் பணி நியமனம் வழங்குவ-தாக உறுதி அளித்தார்.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில், 177-வதாக எங்கள் கோரிக்கை இடம் பெற்று இருந்தது. 100 சதவீதம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக, தி.மு.க.,வினர் கூறுகின்றனர். இது காதில் பூ

சுற்றும் வேலையாகவே கருதுகிறோம். எனவே தான் நாங்கள், காதில் பூ வைத்து போராட்டத்தில் ஈடுபடுகிறோம். மறு நியமன போட்டி தேர்வுக்கான அரசாணை எண், 149ஐ முற்றிலும் நீக்க வேண்டும்.

வாழ்வாதாரம் இழந்து தவிக்கும், 4,000 ஆசிரியர்க-ளுக்கு குறைந்தபட்ச தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us