தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/செவிலியர் கொலை வழக்கு வாலிபர் மீது 'குண்டாஸ்'

செவிலியர் கொலை வழக்கு வாலிபர் மீது 'குண்டாஸ்'

செவிலியர் கொலை வழக்கு வாலிபர் மீது 'குண்டாஸ்'


ADDED : நவ 20, 2026 03:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2026 03:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:பெண் செவிலியரை கழுத்தை நெரித்து கொலை செய்து, 4 பவுன் தாலிக்கொடியை பறித்த வாலிபரை, போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை சேர்ந்த ரஞ்சித்குமார் மனைவி உத்திரா, 26. திருப்பூர் மாவட்டம். பல்லகவுண்டன்பாளையத்தில் கணவருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். உத்திரா, பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றினார்.

கடந்த, அக்., 14ல் உத்திரா வேலை முடிந்து வீட்டிற்கு கிளம்பினார். ஆனால், வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஊத்துக்குளி போலீஸ் ஸ்டேஷனில், உத்திரா மாயமானதாக அவரது கணவர் ரஞ்சித்குமார் புகார் அளித்தார். இதற்கிடையில் பெருந்துறை, விஜயமங்கலம் டோல்கேட் அருகே காட்டுப்பகுதியில் நிர்வாண நிலையில், உத்திரா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். உத்திராவை கொலை செய்தது, அவருடன் மருத்துவமனையில் பணியில் இருந்த, திருப்பூர் மாவட்டம், ஆண்டிபாளையம் சரவணன், 23, என்பது தெரியவந்தது. உத்திரா அணிந்திருந்த, 4 பவுன் தாலிக்கொடிக்கு ஆசைப்பட்டு, உத்திராவை ஆசை வார்த்தை கூறி, தனியாக பைக்கில் அழைத்து சென்று, கழுத்தை நெரித்து, சரவணன் கொலை செய்தது தெரியவந்தது.

சரவணனை போலீசார் கைது செய்து, கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர். கொடூர கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சரவணனை, குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட எஸ்.பி., கிரண் ஸ்ருதி, கலெக்டருக்கு பரிந்துரைத்தார். இதை ஏற்ற கலெக்டர் கந்தசாமி, சரவணனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து கோபி மாவட்ட சிறையில் இருந்த சரவணனை, பெருந்துறை போலீசார், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us