ADDED : டிச 16, 2024 03:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பாளையம்: டி.என்.பாளையம், கள்ளிப்பட்டி அருகேயுள்ள பெருமுகை, அண்ணா நகரை சேர்ந்த வெங்கடேஷ் மகன் நந்தகுமார், 24; விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு சத்தி--அத்தாணி சாலையில், பைக்கில் சென்றார்.
தண்ணீர்பந்தல் நிறுத்தத்தில் நின்ற பஸ்சை முந்தியபோது, சத்தி, ராம்பயலுரை சேர்ந்த மாரிச்-சாமி ஓட்டி வந்த ஆம்னி வேன் மோதியது. இதில் நந்தகுமார் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். கோபியில் தனியார் மருத்-துவமனையில் சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து பங்களாப்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

