/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மகளிர் இலவச பஸ்சில் வசூல்; தற்காலிக கண்டக்டர் நீக்கம்
/
மகளிர் இலவச பஸ்சில் வசூல்; தற்காலிக கண்டக்டர் நீக்கம்
மகளிர் இலவச பஸ்சில் வசூல்; தற்காலிக கண்டக்டர் நீக்கம்
மகளிர் இலவச பஸ்சில் வசூல்; தற்காலிக கண்டக்டர் நீக்கம்
ADDED : ஜன 26, 2025 07:45 AM
புன்செய்புளியம்பட்டி : ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டியில் இருந்து பவானிசாகர் வழியாக பண்ணாரிக்கு, பி-1 அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் மதியம் பண்ணாரிக்கு பஸ் கிளம்பியது. மகளிருக்கு பயணம் செய்ய இலவசம் என்பதால், பெண் பயணியர் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
இந்நிலையில், கண்டக்டர் தரணிதரன், 'இன்று வெள்ளிக்கிழமை என்பதால், பண்ணாரி கோவிலுக்கு சிறப்பு டிரிப்பாக இயக்கப்படுகிறது. டிக்கெட் வாங்க வேண்டும்' என்று கூறியுள்ளார். இதனால் பலர் டிக்கெட் வாங்கியுள்ளனர்.
பண்ணாரிக்கு சென்ற பிறகு பஸ்சிலிருந்து இறங்கிய பெண் பயணியர், முன்பகுதியில் சென்று பார்த்தபோது, சிறப்பு பேருந்து என, எதுவும் குறிப்பிடவில்லை. அதிர்ச்சியடைந்த பெண்கள், 'மகளிருக்கு இலவசம் என அரசு அறிவித்துள்ள நிலையில், பொய் சொல்லி எதற்காக கட்டணம் வசூலித்தீர்கள்?' என்று கூறி, கண்டக்டரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் வெலவெலத்துப்போன கண்டக்டர், டிக்கெட்டுக்கு வசூலித்த பணத்தை திரும்ப தந்துள்ளார். இது தொடர்பான வீடியோ பரவி வருகிறது.
சத்தி அரசு போக்குவரத்து கிளை மேலாளர் சபரி நாகேஸ்வரன் கூறுகையில், ''பண்ணாரி செல்லும் பி-1 அரசு டவுன் பஸ்சில் பெண் பயணியரிடம், கண்டக்டர் டிக்கெட்டுக்கு பணம் பெற்றதாக, பயணியர் சிலர் புகார் தெரிவித்தனர். தற்காலிக நடத்துநரான தரணிதரன், பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்,'' என்றார்.