/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோவில் நிர்வாகத்தை ஒப்படைக்குமாறு கடிதம் எதிர்ப்பு தெரிவித்து திரண்ட பக்தர்களால் பதற்றம்
/
கோவில் நிர்வாகத்தை ஒப்படைக்குமாறு கடிதம் எதிர்ப்பு தெரிவித்து திரண்ட பக்தர்களால் பதற்றம்
கோவில் நிர்வாகத்தை ஒப்படைக்குமாறு கடிதம் எதிர்ப்பு தெரிவித்து திரண்ட பக்தர்களால் பதற்றம்
கோவில் நிர்வாகத்தை ஒப்படைக்குமாறு கடிதம் எதிர்ப்பு தெரிவித்து திரண்ட பக்தர்களால் பதற்றம்
ADDED : நவ 29, 2025 01:33 AM
சென்னிமலை,
சென்னிமலை அருகே கோவில் நிர்வாகத்தை ஒப்படைக்குமாறு கடிதம் அனுப்பியதை எதிர்த்து, பக்தர்கள் திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது.சென்னிமலை யூனியன் ஈங்கூரில் பழமையான தம்பிராட்டி அம்மன் கோவில் உள்ளது. கொங்கு வேளாளர் சமூகத்தில் ஒரு பிரிவான ஈஞ்சன் குலத்தினரின் குல தெய்வ கோவிலாக உள்ளது. இதை, 2,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வழிபட்டு வருகின்றனர்.இந்நிலையில் கோவிலை இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைக்குமாறு அதிகாரிகள் கடிதம் அனுப்பினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவில் வளாகத்தில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் நேற்று திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது. சென்னிமலை இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் கூறியதாவது:
கோவில் நிர்வாகத்திலிருந்து நீக்கப்பட்ட தனி நபர், இந்து சமய அறநிலையத் துறைக்கு கடிதம் எழுதி, ஐகோர்ட்டில் வழக்கு போட்டுள்ளார். கோவில் நிர்வாகத்தை இந்து சமய அறநிலைய துறையிடம் ஒப்படைப்பதாக அவர் கூறியிருந்ததை காரணமாக கொண்டு, இந்து சமய அறநிலையத் துறை அவசர நடவடிக்கையில் இறங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தனி நபரின் தவறான கடிதத்தை வைத்து, 2,000 குடும்பங்களின் குலதெய்வ கோவிலை அறநிலையத் துறை எப்படி கையகப்படுத்தலாம். இவ்வாறு கூறினர். தகவலறிந்து பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயக்குமார் வந்தார். இதை தொடர்ந்து அவர் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் ஆலோசனை நடத்தினர்.
'பாரம்பரியமாக நிர்வகிக்கப்படும் கோவிலை, அறநிலைய துறையிடம் ஒப்படைக்க முடியாது. நிர்வாகத்தில் இல்லாத நபர் கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை சட்ட ரீதியாக எதிர்கொள்வது' என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மஹா ஈஸ்வரமூர்த்தி, பா.ஜ., மாவட்ட தலைவர் ராயல் சரவணன், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

