/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
யூனியன் அலுவலகத்தில் கல்வெட்டு அகற்றம் பஞ்., தலைவர்கள் திரண்டதால் பதற்றம்
/
யூனியன் அலுவலகத்தில் கல்வெட்டு அகற்றம் பஞ்., தலைவர்கள் திரண்டதால் பதற்றம்
யூனியன் அலுவலகத்தில் கல்வெட்டு அகற்றம் பஞ்., தலைவர்கள் திரண்டதால் பதற்றம்
யூனியன் அலுவலகத்தில் கல்வெட்டு அகற்றம் பஞ்., தலைவர்கள் திரண்டதால் பதற்றம்
ADDED : டிச 24, 2024 07:53 AM
பெருந்துறை: பெருந்துறை யூனியனில், 12 யூனியன் கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் ஆறு பேர் அ.தி.மு.க.,; ஆறு பேர் தி.மு.க.,வை சேர்ந்த-வர்கள். சேர்மேனாக சாந்தி ஜெயராஜ், துணை சேர்மேனாக உமா மகேஸ்வரன் உள்ளனர். இவர்கள் அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்கள். அதேசமயம் யூனியனில், 29 பஞ்., உள்ளது. வரும் ஜன., 4ம் -தேதியுடன் உள்ளாட்சி பதவிக்காலம் முடிகிறது. இதனால் யூனியன் அலுவலக கீழ் தளத்தில் சேர்மேன், துணை சேர்மேன், யூனியன் கவுன்சிலர்கள் பெயர் மற்றும் பதவி கொண்ட நினைவு கல்வெட்டு அண்மையில் வைக்கப்பட்டது.
இதனால், 29 பஞ்., தலைவர்களும், தங்கள் பெயர், பதவி கொண்ட ஒரு கல்வெட்டை, முதல் தளத்தில் உள்ள கூட்ட-ரங்கின் முன்புறம், 15 நாட்களுக்கு முன் வைத்தனர். இந்த கல்-வெட்டு இரண்டு நாட்களுக்கு முன் அகற்றப்பட்டுள்ளது. இதைய-றிந்த, 29 பஞ்., தலைவர்களும், நேற்று மதியம் யூனியன் அலுவ-லகத்துக்கு வந்தனர். ஆணையாளர் பிரேமா, சேர்மேன் சாந்தி ஜெயராஜை கண்டித்து கோஷமிட்டனர். அங்கு வந்த உதவி இயக்குனர் (ஊராட்சி) உமா-சங்கர், கல்வெட்டு வைப்பதற்கு இருதரப்பும் அனுமதி பெற-வில்லை என்றார். இதையறிந்து வந்த பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயக்குமார், சேர்மேன் செய்தது தவறு என்றார். இதுகுறித்து, 29 பஞ்., தலைவர்களும், அமைச்சர் முத்துசாமியை இன்று சந்திக்க முடிவு செய்துள்ளனர்.