/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோவில் பிரச்னையில் தாளவாடி போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
/
கோவில் பிரச்னையில் தாளவாடி போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
கோவில் பிரச்னையில் தாளவாடி போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
கோவில் பிரச்னையில் தாளவாடி போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
ADDED : நவ 06, 2025 01:33 AM
சத்தியமங்கலம் : தாளவாடி அருகே, போலீசாரை கண்டித்து, 200க்கும் மேற்பட்டோர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே தொட்டகாஜனுாரில் மண்டே சுவாமி கோவில் உள்ளது. இங்கு இரு பிரிவை சேர்ந்தவர்கள் வழிபட்டு வருகின்றனர்.
இதில் ஒரு பிரிவினர் கோவிலை நிர்வாகம் செய்வதில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் இரு பிரிவினர் மாறி மாறி போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில், போலீசார் ஒரு பிரிவினருக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி நேற்று காலை, 10:30 மணியளவில் தாளவாடி போலீசாரை கண்டித்து ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சத்தியமங்கலம் டி.எஸ்.பி., முத்தரசு பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.