ADDED : ஜூன் 14, 2026 05:06 AM
பெருந்துறை:பெருந்துறை
சட்டமன்ற தொகுதி நான்காவது இடைத்தேர்தலை சந்திக்கிறது.
சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பெருந்துறை தொகுதியில் அதிமுக
சார்பில் இரண்டாவது முறையாக களமிறங்கிய ஜெயக்குமார் வெற்றி
பெற்றார்.
ஆனால் தொகுதி பக்கம் எட்டி பார்க்காமல், வெற்றி சான்றிதழுடன்
சென்னைக்கு சென்றவர், தனது பதவியை ராஜினாமா செய்து, த.வெ.க.,வில்
இணைந்து, அவர் சார்ந்த கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். இதனால்
தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பெருந்துறை
தொகுதி சந்திக்கும், நான்காவது இடைத்தேர்தல் ஆகும்.முன்னதாக,
1967 தேர்தலில் சம்புத்த சோசலிட் பார்ட்டி கட்சி பாலசுப்பிரமணியம்
வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.வானார். அவர் விபத்தில் இறந்ததால், 1969ல்
இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அவருடைய தம்பி சண்முகசுந்தரம்
வெற்றி பெற்றார்.
அவரும் இறந்ததால், 1970ல் மீண்டும் இடைத்தேர்தல்
நடந்தது. இதில் தி.மு.க., கூட்டணியில் களமிறங்கிய இ.கம்யூ.,
சென்னியப்பன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார். 1991 தேர்தலில்
அ.தி.மு.க., சார்பில் வென்ற சுப்பிரமணியன் மரணம் அடைந்ததால், 1994ல்
இடைத்தேர்தல் நடந்தது. இதில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட
பெரியசாமி வெற்றி பெற்றார். இந்த நிலையில் ஜெயக்குமார் ராஜினாமாவை
தொடர்ந்து, நான்காவது முறையாக இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.
