ADDED : ஜூன் 15, 2024 07:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர் : அந்தியூர், சிவசக்திநகரை சேர்ந்தவர் இளவரசன், 17; பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு, பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு சென்று வந்தார். ஒரு மாதமாக யாரிடமும் பேசாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியில் உள்ள நண்பன் வீட்டுக்கு துாங்க சென்றவர், மின்விசிறியில் துாக்கிட்டு கொண்டார். சிறுவனை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனையில் இளவரசன் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.