/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அக்னி சட்டி ஏந்தி சாரை சாரையாக வந்த பக்தர்கள் விழாக்கோலம் பூண்ட மஞ்சள் மாநகர்
/
அக்னி சட்டி ஏந்தி சாரை சாரையாக வந்த பக்தர்கள் விழாக்கோலம் பூண்ட மஞ்சள் மாநகர்
அக்னி சட்டி ஏந்தி சாரை சாரையாக வந்த பக்தர்கள் விழாக்கோலம் பூண்ட மஞ்சள் மாநகர்
அக்னி சட்டி ஏந்தி சாரை சாரையாக வந்த பக்தர்கள் விழாக்கோலம் பூண்ட மஞ்சள் மாநகர்
ADDED : மார் 31, 2025 02:39 AM
ஈரோடு: ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவிலுக்கு, சாரை சாரையாக அலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும் வந்து
பக்தர்கள் வழிபட்டனர்.
ஈரோடு மாநகரில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்களில் விழா நடந்து வருகிறது. பெண்கள் தினமும் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலை முதல் காவிரி ஆற்றில் குளித்து பூஜை செய்த பக்தர்கள் சாரை, சாரையாக பெரிய மாரியம்மன் கோவிலுக்கு அலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும் வரத் தொடங்கினர். கிரேனில் தொங்கிய-படி சில பக்தர்கள் பறவை காவடியாக வந்தனர். பலர் முகத்தில், முதுகில் அலகு குத்தி வந்தனர். இதனால் தரிசனம் செய்யவும், கம்பத்துக்கு புனித நீர் ஊற்றவும் நீண்ட வரிசை காணப்பட்டது. சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் வரிசையில் நின்று கோவிலுக்கு சென்றனர். பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு அலங்-காரம் செய்யப்பட்டு இருந்தது. இதேபோல் சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலுக்கும் பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும் சென்றனர். விழாவையொட்டி தனியார் சார்பில் அன்னதானம், கூழ் ஊற்றப்பட்டது. மூன்று கோவில்கள் விசேஷம் என்பதால் மாநகரமே விழாக்கோலம் பூண்-டுள்ளது. நாளை அதிகாலை, 5:30 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா நடக்கிறது.