/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொழுவத்தில் புகுந்து நாய்கள் கடித்து பசு பலி
/
தொழுவத்தில் புகுந்து நாய்கள் கடித்து பசு பலி
ADDED : அக் 20, 2024 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொழுவத்தில் புகுந்து நாய்கள் கடித்து பசு பலி
கோபி, அக். 20-
கோபி அருகே காசிபாளையத்தை சேர்ந்தவர் அம்மணி, 60; ஒரு பசு மாடு வளர்த்து வந்தார். நேற்று அதிகாலை பசுவின் சத்தம் கேட்டு, மகனுடன் மாட்டு தொழுவத்துக்கு சென்றார். அப்போது தெருநாய்கள் பசு மாட்டை கடித்து குதறிக் கொண்டிருந்தன. இருவரும் நாய்களை விரட்டி அடித்தனர். ஆனாலும் பசு மாடு இறந்து விட்டது. இதுகுறித்து அம்மணியம்மாள் மகன் மணிகண்டன் கூறுகையில், 'தெருநாய் தொல்லையால் இதுவரை எங்களுடைய, 20 கோழிகள், இரு வெள்ளாடுகள் பலியாகி உள்ளன. தற்போது பசு மாட்டை இழந்துள்ளோம். தெருநாய்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்' என்றார்.