தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பெருந்துறை இடைத்தேர்தல் ஆயத்த பணியை தொடங்கிய மாவட்ட நிர்வாகம்

பெருந்துறை இடைத்தேர்தல் ஆயத்த பணியை தொடங்கிய மாவட்ட நிர்வாகம்

பெருந்துறை இடைத்தேர்தல் ஆயத்த பணியை தொடங்கிய மாவட்ட நிர்வாகம்


ADDED : ஜூன் 17, 2026 05:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2026 05:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு:பெருந்துறை இடைத்தேர்தலுக்காக மின்னணு இயந்திரங்கள் (இ.வி.எம்.,கள்) உள்ளிட்ட இயந்திரங்களை தயார் செய்யும் வகையில், முதற்கட்ட சரி பார்க்கும் பணி துவங்கியது.

தமிழகத்தில் கடந்த ஏப்., மாதம் நடந்த தேர்தலில், 108 தொகுதிகளை வென்ற த.வெ.க., ஆட்சி அமைத்தது. அதேசமயம் முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார்.

முன்னதாக அ.தி.மு.க.,வில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,க்களான பெருந்துறை - ஜெயகுமார், மதுராந்தகம் - மரகதம் குமாரவேல், தாராபுரம் - பி.சத்யபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால், இந்த தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஐந்து தொகுதிகளிலும் இடைத்தேர்தல் பணிக்கு தயாராகும்படி, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டார்.

இதில் பெருந்துறை தொகுதியும் உள்ளதால், ஈரோடு மாவட்ட நிர்வாகம், தேர்தல் ஆயத்த பணியை நேற்று தொடங்கியது. ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் ஆணைய கிடங்கில், பெருந்துறை தொகுதிக்கான இ.வி.எம்.,கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், கலெக்டர் கந்தசாமி முன்னிலையில் முதற்கட்ட சரிபார்ப்பு பணி நேற்று துவங்கியது.

தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

பெருந்துறை தொகுதியில், 292 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கைப்படி, 2 மடங்காக, தலா, 584 இ.வி.எம்.,கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வி.வி.பேட் ஆகியவை எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள பதிவுகள் அகற்றி, பதிவு இன்றி சரி பார்த்து, பேட்டரி நிலை ஆய்வு செய்து தயார் செய்ய உள்ளனர். இதற்காக 'பெல்' நிறுவன பொறியாளர்கள் ஆறு பேர் வந்துள்ளனர். இப்பணி ஐந்து நாட்கள் வரை நடக்கும். முற்றிலும் பழுதான, பயன்படுத்த இயலாத இயந்திரங்களுக்கு பதில், வேறு இயந்திரங்கள் சேர்க்கப்படும். இப்பணி முடிந்தும் மாதிரி ஓட்டுப்பதிவு செய்து, சரியாக உள்ளதை உறுதி செய்வர். இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us