/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில் கோர்ட் உத்தரவுப்படி இடித்து அகற்றம்
/
ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில் கோர்ட் உத்தரவுப்படி இடித்து அகற்றம்
ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில் கோர்ட் உத்தரவுப்படி இடித்து அகற்றம்
ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில் கோர்ட் உத்தரவுப்படி இடித்து அகற்றம்
ADDED : நவ 08, 2024 07:29 AM
ஈரோடு: ஈரோடு அருகே ரங்கம்பாளையத்தில் ரிங் ரோடு ரவுண்டானா உள்ளது. இதில் சென்னிமலை ரோடு சந்திக்கும் பகுதியை ஒட்டி விநாயகர் கோவில் இருந்தது.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர், ரிங் ரோட்டை ஒட்டி நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த்துறைக்கு சொந்தமான அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் குறிப்பிட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற, ஈரோடு கலெக்டருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து நடந்த வருவாய் துறையினர் ஆய்வில், ஓடை புறம்போக்கு நிலத்தில் கோவில் இருந்தது தெரிந்தது. இதையடுத்து கோவிலை அகற்றும் பணி தொடங்கியது. கோவிலில் இருந்த சிலையை முறைப்படி, பூஜை செய்து நேற்று காலை, கோவில் நிர்வாகத்தினர் எடுத்துக் கொண்டனர். பிறகு ஈரோடு தாலுகா மண்டல துணை தாசில்தார் செல்வம் தலைமையில், வருவாய் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்னிலையில், கோவில் இடித்து அகற்றப்பட்டது.