/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தி.மலை அண்ணாமலையார் மலையில் ஏற்றப்பட்ட மஹா தீபம் நிறைவு
/
தி.மலை அண்ணாமலையார் மலையில் ஏற்றப்பட்ட மஹா தீபம் நிறைவு
தி.மலை அண்ணாமலையார் மலையில் ஏற்றப்பட்ட மஹா தீபம் நிறைவு
தி.மலை அண்ணாமலையார் மலையில் ஏற்றப்பட்ட மஹா தீபம் நிறைவு
ADDED : டிச 24, 2024 07:58 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்-திகை தீப திருவிழாவையொட்டி, மலை மீது ஏற்றப்பட்ட மஹா தீபம், நேற்றிரவுடன் நிறைவடைந்தது.திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்-திகை தீப திருவிழாவையொட்டி, கடந்த, 13- ல், 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, 11 நாட்கள் எரிந்த தீபத்தை, 40 கி.மீ., துாரம் வரை, பக்தர்கள் தினமும் கண்டு வழிபட்டு வந்தனர். கடந்த, 11 நாட்க-ளாக, அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை-மோதிய நிலையில், மலைமீது ஏற்றப்பட்ட மஹா தீபம் நேற்றிர-வுடன் நிறைவடைந்தது.
இன்று காலை, மஹா தீப கொப்பரை, மலை உச்சியிலிருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்படும். அதிலி-ருந்து சேகரிக்கப்படும் தீப சுடர் மை பிரசாதம், வரும், ஜன., 13 ல் அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும், ஆருத்ரா தரிசனத்-தன்று, முதலில் நடராஜருக்கு சாத்தப்பட்டு பின்னர், பக்தர்-களுக்கு வழங்கப்படும்.