ADDED : ஆக 12, 2024 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மொடக்குறிச்சி: சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள ராமகவுண்டனுாரை சேர்ந்தவர் சுரேஷ், 34, கட்டட மேஸ்திரி.
திருமணமாகி ஒரு மகள் உள்ளார். முத்துாரில் இருந்து ஈரோடு நோக்கி சிவகிரி ஒத்தப்பனை நொய்யல் செக்போஸ்ட் அருகே பைக்கில் நேற்று வந்தார். அப்போது நிலை தடுமாறி எதிரே வந்த டாடா இன்ட்ரா காரில் மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார். சிவகிரி போலீசார் உடலை கைப்பற்றி கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரை ஓட்டி வந்த சிவகி,ரி சின்ன தாண்டம்பாளையம், செல்வம் நகர் யுவராஜிடம், 35, விசாரணை நடத்தி வருகின்றனர்.

