/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சித்தாளுடன் குடும்பம் நடத்திய மேஸ்திரி விபரீத முடிவு
/
சித்தாளுடன் குடும்பம் நடத்திய மேஸ்திரி விபரீத முடிவு
சித்தாளுடன் குடும்பம் நடத்திய மேஸ்திரி விபரீத முடிவு
சித்தாளுடன் குடும்பம் நடத்திய மேஸ்திரி விபரீத முடிவு
ADDED : பிப் 05, 2026 04:27 AM
ஈரோடு,: ஈரோட்டில் மனைவியை பிரிந்து, சித்தாளாக வேலைக்கு வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய கட்டட மேஸ்திரி தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் - திருச்செங்கோடு சாலை குறுக்கு வீதியை சேர்ந்தவர் மணிகண்டன்,40; கட்டட மேஸ்திரி. இவருக்கு அனிதா என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். அனிதா தனி யார் மருத்துவமனையில் செவிலிய-ராக பணியாற்றி வருகிறார். மணிகண்டன், அவரது மனைவி மற்றும் குடும்பத்தை பிரிந்து, சித்தாளாக வேலைக்கு வந்த பெண்-ணுடன் பழக்கம் ஏற்பட்டு, கடந்த ஆறு மாதமாக, ஈரோடு, கருங்-கல்பாளையம் ராஜகோபால் தேட்டத்தில் வாடகை வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தார். கடந்த 2ல் மணிகண்டன் வீட்டில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். கருங்-கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.