/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சூரம்பட்டியில் நகை திருடிய ஆசாமி ஒரு மணி நேரத்தில் பிடித்த போலீஸ்
/
சூரம்பட்டியில் நகை திருடிய ஆசாமி ஒரு மணி நேரத்தில் பிடித்த போலீஸ்
சூரம்பட்டியில் நகை திருடிய ஆசாமி ஒரு மணி நேரத்தில் பிடித்த போலீஸ்
சூரம்பட்டியில் நகை திருடிய ஆசாமி ஒரு மணி நேரத்தில் பிடித்த போலீஸ்
ADDED : நவ 12, 2024 01:28 AM
ஈரோடு, நவ. 12-
ஈரோடு, சூரம்பட்டி ஏழாவது வீதி, என்.ஜி.ஜி.ஓ., காலனியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம், 59; அப்பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். மனைவியுடன் நேற்று முன்தினம் வெளியே சென்றவர், மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் மர்ம ஆசாமி இருப்பதை அறிந்து அவரை பிடிக்க முயன்றார். இதனால் மர்ம ஆசாமி தான் வந்த ஹோண்டா ஆக்டிவா வாகனத்தை விட்டுவிட்டு பக்கத்து வீட்டு சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினார். இதுபற்றிய புகாரின்படி சென்ற சூரம்பட்டி போலீசார் வீட்டில் சோதனை நடத்தியதில், 20.5 பவுன் நகை திருட்டு போனது தெரிந்தது. அதேசமயம் அப்பகுதியில் சோதனை நடத்தியபோது, முள் காட்டில் படுத்திருந்த ஆசாமியை பிடித்தனர்.
அதேபகுதியில் ஒளித்து வைத்திருந்த பையில், தங்க நகை இருந்தது. விசாரணையில் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த ராயபாட்டை வெங்கண்ணா, 48, என தெரிய வந்தது. அவர் மீது திருட்டு, கொலை உள்பட, 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. திருட்டு நடந்த ஒரு மணி நேரத்தில் திருடனை பிடித்துள்ளோம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.