/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குழந்தைகளை அடிப்பதாக சாமியார் மீது குற்றச்சாட்டு
/
குழந்தைகளை அடிப்பதாக சாமியார் மீது குற்றச்சாட்டு
ADDED : மார் 05, 2024 01:40 AM
ஈரோடு;பவானி தாலுகா தொட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஊராட்சிகோட்டை கிளை தலைவர் பிரகாஷ் தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மனு வழங்கி கூறியதாவது:
தொட்டிபாளையம் கிராமத்தில், சாமியார் போன்று ஒருவர் வசிக்கிறார். அவர், தனது குழந்தையையும், பக்கத்து வீடுகளில் இருந்து வரும் குழந்தைகளையும் அடித்து, துன்புறுத்தி, ஒழுக்கம் கற்பிப்பதாக கூறி வருகிறார். இதுபற்றி கேட்டால் முரணாக பேசுகிறார். தவிர வீட்டில் டிரம்ஸ் உள்ளிட்ட பல வாத்தியங்களை இரவு நேரத்தில் அதிக ஒலியுடன் வாசித்து, பக்கத்தில் வசிப்போரை சிரமப்படுத்துகிறார். இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

