/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'வாரச்சந்தை வாக்குறுதி காற்றில் பறந்தது' அமைச்சர் ஏமாற்றி விட்டதாக குமுறல்
/
'வாரச்சந்தை வாக்குறுதி காற்றில் பறந்தது' அமைச்சர் ஏமாற்றி விட்டதாக குமுறல்
'வாரச்சந்தை வாக்குறுதி காற்றில் பறந்தது' அமைச்சர் ஏமாற்றி விட்டதாக குமுறல்
'வாரச்சந்தை வாக்குறுதி காற்றில் பறந்தது' அமைச்சர் ஏமாற்றி விட்டதாக குமுறல்
ADDED : அக் 19, 2024 01:17 AM
'வாரச்சந்தை வாக்குறுதி காற்றில் பறந்தது'
அமைச்சர் ஏமாற்றி விட்டதாக குமுறல்
ஈரோடு, அக். 19-
ஈரோட்டில் திங்கள்கிழமை மாலை முதல் செவ்வாய்கிழமை மாலை வரை நடக்கும் ஜவுளி வாரச்சந்தை, தென்னிந்திய அளவில் பிரபலமானது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, மகாராஷ்டிரா மாநில வியாபாரிகளும் ஜவுளி கொள்-முதல் செய்வது வழக்கம்.
கனி மார்க்கெட் வளாகத்தில் ஜவுளி வாரச்சந்தை நடந்து வந்த நிலையில், புதிய வணிக வளாகம் கட்டுவதற்காக அகற்றப்பட்-டது. தற்போது காந்திஜி சாலை மற்றும் அசோகபுரத்தில் வாரச்-சந்தை நடந்து வருகிறது.
இந்நிலையில் ஜவுளி வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு, கனி மார்க்கெட் வணிக வளாக காலியிடத்தில், மீண்டும் வாரச்சந்தை அமைக்க, மாநக-ராட்சி நிர்வாகத்துக்கு, சில மாதங்களுக்கு முன் வியாபாரிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
குறிப்பாக தீபாவளி பண்டிகை தொடங்கும் முன், வாரச்சந்தை அமைக்க ஏற்பாடு செய்யும்படி, அமைச்சர் முத்துசாமி, ஆணையாளர் மனிஷிடம், வியாபாரிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். தீபாவளிக்கு ௧௨ நாட்களே உள்ள நிலையில், வாரச்சந்தை அமைக்காததால், ஜவுளி வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது:
தீபாவளி பண்டிகை தொடங்குவதற்கு முன், ஜவுளி வாரச்சந்தை அமைக்க, அமைச்சர் முத்துசாமியிடம் மூன்று முறை கோரிக்கை விடுத்திருந்தோம். வாரச்சந்தை அமைத்து தருவதாக உறுதி அளித்திருந்தார்.
தீபாவளிக்கு ௧௨ நாட்களே உள்ள நிலையில், வாரச்சந்தை அமைப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் அமைச்சர் மேற்கொள்ளவில்லை. எதிர்பார்த்து காத்திருந்த எங்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் முத்துசாமி எங்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார். மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்திருந்தாலாவது, தீபாவளியை முன்னிட்டு, தற்காலிகமாக கடைகளை அமைத்திருப்போம். வாரச்சந்தை அமைக்கப்படாததால், பல லட்சம் ரூபாய் வருவாயை இழந்து விட்டோம்.
இவ்வாறு கூறினர்.