/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
லிப்ட் செயல்படாததால் பொதுமக்கள் அவதி
/
லிப்ட் செயல்படாததால் பொதுமக்கள் அவதி
ADDED : ஜூலை 11, 2024 12:21 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி மைய அலுவலகத்தில் லிப்ட் இயங்காததால், அலுவலர்களும், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர்.ஈரோடு மாநகராட்சி மைய அலுவலக இரண்டு மாடி கட்ட-டத்தில், வருவாய்துறை, தணிக்கை பிரிவு, மேயர் அலுவலகம், துணை மேயர் அலுவலகம், துணை ஆணையர் அலுவலகம் உள்-ளிட்டவை செயல்படுகின்றன.
இந்த கட்டடத்தில் உள்ள லிப்ட், கடந்த இரு நாட்களாக செயல்படவில்லை. லிப்ட் மின் இணைப்பில் கோளாறு ஏற்பட்டிருப்பதால், செயல்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் முதல் தளம், இரண்டாவது தளத்-துக்கு செல்லும் அலுவலர்கள், பொதுமக்கள் படியேறி அவதிப்ப-டுகின்றனர். அலுவலர்கள் புகார் செய்தும் லிப்ட் சரி செய்யப்பட-வில்லை. லிப்ட்டை விரைவாக பழுது பார்த்து, அதனை மீண்டும் இயக்க வேண்டும்.