/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பஸ் கண்டக்டர் மாயம் போலீசில் தங்கை புகார்
/
பஸ் கண்டக்டர் மாயம் போலீசில் தங்கை புகார்
ADDED : செப் 26, 2024 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: சேலம் மாவட்டம், வடுகப்பட்டி அருகே தட்டாப்பட்டியை சேர்ந்-தவர் பழனிசாமி, 38, தனியார் பஸ் கண்டக்டர். கடந்த, 23ல், இவ-ரது நண்பர்களான வைத்தீஸ்வரன், கமல், புவனேஸ்வரன், சீனி ஆகியோர், சித்தோடு அருகே கோணவாய்க்கால் கன்னிமார் கோவில் பகுதியில், காளிங்கராயன் வாய்க்கால் அருகே, மது அருந்தி கொண்டிருந்தனர். பின்னர், வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த பழனிசாமியை காணவில்லை.
இது குறித்து, உறவி-னர்களுக்கு தகவல் கொடுத்து, விசாரித்ததில் எந்த பயனும் இல்லை. இந்நிலையில், அண்ணனை காணவில்லை என, தங்கை கலா, 31, கொடுத்த புகார்படி, சித்தோடு போலீசார் விசாரித்து வரு-கின்றனர்.

