/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகராட்சி பூக்கடைகளுக்கு 5 ஆண்டாக நடக்காத டெண்டர் 2 ஆண்டாக மாத வாடகை ரூ.௧.௫௦ லட்சம் எங்கே போகிறது?

ADDED : நவ 30, 2024 01:19 AM
ஈரோடு, நவ. 30-
ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டில், மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில், 10க்கும் மேற்பட்ட பூக்கடைகள் செயல்படுகின்றன. இவற்றின் மாத வாடகையான, 1.50 லட்சம் ரூபாய், மாநகராட்சி நிர்வாகத்துக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக செலுத்தப்படவில்லை. ஆனால், கடை உரிமையாளர்களிடம், ஆளும்கட்சியினர் மாதந்தோறும் வாடகையை வசூலித்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. மாநகராட்சி வருவாயை அதிகரிக்கும் வகையில், வாடகைத்தொகையை முறையாக வசூலிக்க, கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து 43வது வார்டு கவுன்சிலர் சபுராமா கூறியதாவது: ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டில், மாநகராட்சிக்கு சொந்தமான பூக்கடைகளுக்கு, 5 ஆண்டுகளுக்கும் மேலாக டெண்டர் விடப்படவில்லை. ஒரு சிலரின் தயவால் அக்கடைகள் செயல்படுகின்றன. கடைகளின் மாத வாடகையான, 1.50 லட்சம் ரூபாய், இரு ஆண்டுகளுக்கு மேலாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு செலுத்தப்படாத நிலையில், குறிப்பிட்ட சிலர் தொகையை வசூலித்து வைத்து கொள்கின்றனர். மாநகராட்சி நிர்வாகம் முறையாக டெண்டர் விட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, உரிய பதில் அளிக்கவில்லை.