ADDED : ஜூலை 27, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு அடுத்த, புங்கம்பாடி ராசாம்பாளையம் பகுதியை சேர்ந்-தவர் பரத்.
டிராவல்ஸ் நடத்தி வருகிறார். தனது வேனில் வாட-கைக்கு ஆட்களை ஏற்றி செல்வதற்காக நேற்று காலை, 8:45 மணிக்கு ஈரோடு வந்தார். மேட்டுக்கடை அருகே வேப்பம்பா-ளையம் என்ற இடத்தில், இன்ஜினில் இருந்து புகை வருவதை கவனித்தார்.உடனடியாக சாலையோரம் வேனை நிறுத்தி, அருகே இருந்த பெட்ரோல் பங்க்கில் இருந்து தீயணைப்பு கருவியை எடுத்து வந்து தீயை அணைக்க முயன்றார். ஆனாலும் இன்ஜினில் தீப்-பற்றி முழுவதும் பரவியது. ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் முழு வேனும் தீயில் சேதமடைந்தது. மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறால் விபத்து ஏற்பட்டிருக்கும் என தெரிவித்தனர். இச்சம்-பவத்தால், 30 நிமிடங்கள் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

