/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிளேக் மாரியம்மன் கோவிலுக்கு தீர்த்தக்குடம்
/
பிளேக் மாரியம்மன் கோவிலுக்கு தீர்த்தக்குடம்
ADDED : மே 10, 2025 01:19 AM
புன்செய்புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டியில் பிரசித்தி பெற்ற பிளேக் மாரியம்மன், மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் சித்திரை திருவிழா விமரிசையாக நடப்பது வழக்கம். நடப்பாண்டு விழா நேற்று முன்தினம் கிராம சாந்தி பூஜையுடன் துவங்கியது.
பவானி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து லட்சுமி அழைத்து வருதல் நேற்று மாலை நடந்தது. எஸ்.ஆர்.டி.,நகர் சக்தி விநாயகர் கோவிலில் இருந்து, முக்கிய வீதிகளின் வழியாக, 200க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். முன்னதாக காளை, கன்று மற்றும் குதிரைக்கு சிறப்பு பூஜை செய்து, பம்பை மேள தாளம் சென்றது. ஊர்வலம் கோவிலை அடைந்தும் சிறப்பு பூஜை செய்து தீர்த்த அபிஷேகம் நடந்தது.
வரும், 14ம் தேதி இரவு கம்பம் நடுதல், 15ம் தேதி இரவு அம்மை அழைத்தல் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 21ம் தேதி அக்னி சட்டி எடுத்தல், பொங்கல் வைபவம், மாவிளக்கு பூஜை நடக்கிறது.
அன்றிரவு மாரியம்மன், பிளேக் மாரியம்மன் மற்றும் ஊத்துக்குளி அம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதி உலா நடக்கும். 22ல் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், பொலிகாளை இழுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 23ல் மஞ்சள் நீராட்டு விழா மற்றும் மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.