ADDED : மார் 11, 2024 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு,
ரயில்வே காலனி குடியிருப்பை சேர்ந்தவர் ஆறுமுகம், 40; ரயில்வே
டெக்னீசியன். திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஆறுமுகம்
மனைவி குடும்ப பிரச்னையால் திருச்சியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று
விட்டார்.
ஆறுமுகமும் கடந்த, 27ல் திருச்சி சென்றார். நேற்றுமுன்
தினம் இரவு வீடு திரும்பினார். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு
திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில்
வைக்கப்பட்டிருந்த, 5 பவுன் தங்க நாணயம் திருட்டு போனது தெரிந்தது.
அவர் புகாரின்படி சூரம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

