/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நடப்பு பருவத்தில் மாவட்டத்தில் 417 டன் விதைகள் இருப்பு
/
நடப்பு பருவத்தில் மாவட்டத்தில் 417 டன் விதைகள் இருப்பு
நடப்பு பருவத்தில் மாவட்டத்தில் 417 டன் விதைகள் இருப்பு
நடப்பு பருவத்தில் மாவட்டத்தில் 417 டன் விதைகள் இருப்பு
ADDED : செப் 28, 2025 02:07 AM
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் நடப்பு பருவத்துக்கு தேவையான உரங்கள், விதைகள் கையிருப்பு உள்ளது.இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிவகுமார் கூறியதாவது: மாவட்டத்தின் இயல்பு ஆண்டு சராசரி மழையளவு, 733.44 மி.மீட்டர். நடப்பாண்டு கடந்த, 26 வரை, 335.48 மி.மீ., வரை பதிவாகி உள்ளது. நடப்பாண்டில் வேளாண் விரிவாக்க மையங்களில் வினியோகம் செய்வதற்காக நெல் விதைகள்-215.4 டன், சிறு தானியங்கள் - 65.4 டன், பயறு வகைகள் - 44.8 டன், எண்ணெய் வித்துக்கள் - 92 டன் என, 417.6 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
ரசாயன உரங்களான யூரியா - 2,715.7 டன், டி.ஏ.பி., - 2,934 டன், பொட்டாஷ் - 2,202 டன், காம்ப்ளக்ஸ் - 7,520 டன் இருப்பில் உள்ளது. நடப்பு பருவத்துக்கு தேவையான இடுபொருட்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளன. விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள், அந்தந்த பகுதி வட்டார, துணை வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவித்துள்ளார்.