/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சோலார் பஸ் ஸ்டாண்ட் 'இருக்கு' ஆனா 'இல்லை'; திறப்பு விழா கண்டும் தீராத சோதனை
/
சோலார் பஸ் ஸ்டாண்ட் 'இருக்கு' ஆனா 'இல்லை'; திறப்பு விழா கண்டும் தீராத சோதனை
சோலார் பஸ் ஸ்டாண்ட் 'இருக்கு' ஆனா 'இல்லை'; திறப்பு விழா கண்டும் தீராத சோதனை
சோலார் பஸ் ஸ்டாண்ட் 'இருக்கு' ஆனா 'இல்லை'; திறப்பு விழா கண்டும் தீராத சோதனை
UPDATED : ஜன 03, 2026 09:07 AM
ADDED : ஜன 03, 2026 07:46 AM

ஈரோடு: ஈரோட்டில் இருந்து தென் மாவட்டத்திற்கு செல்லும் பஸ்களுக்-காக சோலாரில், மாநகராட்சிக்கு சொந்தமான, 19.9 ஏக்கரில், 74.90 கோடியில் புது பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. கடந்த நவ., 26ல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த நிலையில், டிச.,4ம் தேதி முதல் பஸ்கள் இயங்குவதாக அறிவித்தனர். ஒன்றி-ரண்டு பஸ்களும் தென்பட்டன. இங்கிருந்து கரூர் மார்க்கமாக, 98 அரசு பஸ்கள், வெள்ளகோவில் மார்க்கமாக, 19 அரசு பஸ்கள் இயக்கப்படும்.
தனியார் பஸ்களை பொறுத்தவரை கரூர் மார்க்கத்தில், 19 பஸ்கள், வெள்ளகோவில் மார்க்கத்தில், 22 பஸ்கள் இயங்கும் என அறிவித்தனர். அறிவிக்கப்பட்டதோடு சரி, இந்த பஸ்கள் அறிவித்தபடி இயங்குகிறதா என கண்காணிப்பார் யாருமில்லை. பணி தொடங்கி பல ஆண்டாக இழுத்தடித்து, முதல்வரால் திறப்பு விழா கண்ட ஒரே காரணத்துக்காக, எவ்வித அடிப்படை வசதி, முன்னேற்பாடு செய்யாததால், திறக்கப்பட்ட பிறகும் ஆதர-வற்ற பிள்ளை போலவே காணப்படுகிறது. இதுகுறித்து அரசு போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
சோலார் பஸ் ஸ்டாண்டில் இருந்து குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பஸ் இயக்கப்படுகிறது. வெள்ளகோவில் மார்க்க பஸ்கள், குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே வருகிறது. பெரும்-பாலான பஸ்கள் பயணிகளை ரவுண்டானா அருகில் இறக்கி விட்டு செல்கின்றன. தனியார் பஸ்கள் நீதிமன்றத்தில் தடை உத்த-ரவு வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இத்துடன் அரசு பஸ்-களும் இங்கு வந்து செல்வதை தவிர்க்கின்றன. வசூல் குறை-வதே இதற்கு காரணம்.
அதேசமயம் இங்கிருந்து மத்திய பஸ் ஸ்டாண்ட்டுக்கு நான்கு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டது. இதில் மகளிர் அதிகம் பயணிப்-பதால், இலவச பயணமாக அமைவதாக கூறி, இரு நாட்களாக ஒரு டவுன் பஸ்சை குறைத்து விட்டனர். இவ்வாறு கூறினர்.
பயணிகள் தரப்பில் கூறியதாவது: பஸ் ஸ்டாண்ட் திறப்புக்கு பின் அமைச்சரோ, அதிகாரிகளோ இங்கு வந்து பார்ப்பதில்லை. மேலும் இவ்வழியாக செல்லும் பெரும்பாலான தனியார் பஸ்கள், அரசியல்வாதிகளுக்கு சொந்த-மானவை. அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து பஸ்-களும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இயக்-கப்பட்டால் மட்டுமே பயணிகளின் வருகை அதிகரிக்கும். பஸ் ஸ்டாண்டிலும் போதிய பாதுகாப்பு வசதி வேண்டும். நடத்துனர், ஓட்டுநருக்கு ஓய்வறை திறக்க வேண்டும்.
குறையாத கட்டணம்
ஈரோடு - மதுரை ஆரப்பாளையம் பஸ் கட்டணம், 165 ரூபாய். ஈரோடு மண்டல அரசு பஸ்களில் மட்டுமே இக்கட்டணத்தில், 7 ரூபாய் குறைத்துள்ளனர். பிற மண்டல அரசு பஸ்களில், 165 ரூபாயே வசூலிக்கின்றனர். திருச்சி, தஞ்சை, கரூர், திண்டுக்கல், வெள்ளக்கோவில் என அனைத்து வழித்தடத்துக்கும் ஈரோடு கட்-டணமே பெறப்படுகிறது.
போதிய கழிப்பறை இல்லை
பஸ் ஸ்டாண்டின் ஒரு பக்கத்தில் உள்ள கழிவறை மட்டுமே திறக்-கப்பட்டுள்ளது. மற்ற எதுவும் திறக்கப்படாததால் பயணிகள், கழி-வறையை தேடி அலைய வேண்டிய நிலை உள்ளது. குடிநீர் பகு-தியில் குழாய் மட்டுமே உள்ளது. தண்ணீர் குடிக்க டம்ளர் கூட வைக்கவில்லை. பெயரளவில் மட்டுமே காவல் நிலையம் உள்-ளது. பகலிலேயே பயமாக உள்ள நிலையில், இரவில் சொல்-லவே தேவையில்லை. பஸ் ஸ்டாண்டுக்கு பயணிகள் வருவதை விட, 24 மணி நேரமும் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக வந்து விடுகின்றன. மொத்தத்தில் சோலார் பஸ் ஸ்டாண்ட் இருக்கு... ஆனா இல்லை... என்று சினிமா பட டயலாக் போல்தான் உள்-ளது. இவ்வாறு கூறினர்.

