/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிரச்னைக்கு தீர்வு காண மனமில்லை ஆய்வுக்கு மட்டும் பஞ்சமில்லை' கனி மார்க்கெட்டுக்கு கனியாத காலம்

ADDED : மே 13, 2025 01:40 AM
ஈரோடு, ஈரோடு ப.செ.பார்க்கில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், கனி மார்க்கெட் வணிக வளாகம் கட்டப்பட்டது. வாடகை, டெபாசிட் தொகை அதிகம் உள்ளிட்ட பல காரணங்களால், இங்கு கடை வைக்க வியாபாரிகள் முன்வரவிலை.
இதனால், 200க்கும் மேற்பட்ட கடைகள் காலியாக உள்ளன. கடையை ஏற்கனவே வாடகைக்கு எடுத்தவர்களும் காலி செய்து செல்கின்றனர்.
கனி மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் அதிக கட்டணம், பொழுது போக்கு அம்சம் இல்லாதது, புட் பார்க் இல்லாதது போன்றவற்றால், மக்கள் புறக்கணிப்பதற்கு பிரதான காரணமாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கனி மார்க்கெட்டில் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள, 10 கடைகளை அகற்ற, பல மாதங்களாக கவுன்சிலர்கள், வியாபாரிகள் புகாரளித்தும், மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் மாநகராட்சி துணை கமிஷனர் தனலட்சுமி, கனி மார்க்கெட்டில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது வியாபாரிகள் கொடுத்த மனுக்களை பெற்று கொண்டார்.
பிளாஸ்டிக் ஒழிப்பு, மஞ்சப்பை திட்டம், போர்டில் தமிழில் பெயர் எழுதுதல் போன்றவற்றை காணவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், துணை கமிஷனர் வந்து சென்றதாக, அலுவலர்கள் தெரிவித்தனர்.