/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தி.மு.க., - காங்., கூட்டணியில் இழுபறி இல்லை;இளங்கோவன்
/
தி.மு.க., - காங்., கூட்டணியில் இழுபறி இல்லை;இளங்கோவன்
தி.மு.க., - காங்., கூட்டணியில் இழுபறி இல்லை;இளங்கோவன்
தி.மு.க., - காங்., கூட்டணியில் இழுபறி இல்லை;இளங்கோவன்
ADDED : மார் 03, 2024 01:58 AM
ஈரோடு;ஈரோட்டில், தமிழக காங்., முன்னாள் தலைவர் மற்றும் ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., இளங்கோவன், நிருபர்களிடம் கூறியதாவது:
தி.மு.க., - காங்., கூட்டணியில் இழுபறி ஏதுமில்லை. இரண்டொரு நாளில் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகிறோம் என பட்டியல் வெளியிடப்படும். பிரதமர் மோடி இந்த தேர்தலுடன் காங்., காணாமல் போகும் என்கிறார். நடக்க உள்ள லோக்சபா தேர்தலுக்கு பின், மோடியை எங்கு தேடினாலும் இருக்க மாட்டார். தமிழகத்தில், 'என் மண்; என் மக்கள்' வெற்றி அடைந்துள்ளதாக பிரதமர் கூறுகிறார். தமிழகம் அவரது சொந்த பூமி என நினைக்கிறார். தமிழகத்தில் இருந்து பணம், நிதி, வரியை வாங்கி கொண்டு, தமிழக வளர்ச்சிக்கு வழங்காமல், சுருட்டி கொண்டு செல்கிறார். 7.50 லட்சம் கோடி ரூபாயை அவர் சுருட்டி இருக்கிறார்.
விஜயதாரணி மற்றும் காங்., கட்சியை சேர்ந்தவர்கள் வெளியேறுவது, சில கெட்ட, மோசமான சக்திகளால் என்பதை புரிய வேண்டும். காங்., கட்சியை துாய்மைப்படுத்த வெளியேறி உள்ளனர்.
இவ்வாறு கூறினார்.

