/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'டிரேடு சென்டருக்கு' போதுமான இடம்கிடைக்கவில்லை; அமைச்சர் முத்துசாமி

ADDED : மே 03, 2025 01:10 AM
ஈரோடு:''ஈரோட்டில், டிரேடு சென்டர் அமைப்பதற்கான போதுமான இடம் கிடைக்கவில்லை,'' என, அமைச்சர் முத்துசாமி கூறினார்.
ஈரோட்டில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக அரசு, தொழில் துறையில் முன்னேற்றம் காண, அனைத்து வகை நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது. ஒவ்வொரு குடும்பத்தில் உள்ளவர்களும், எதோ ஒரு வகையில் அரசால், அரசின் திட்டத்தால் பயன் பெற வேண்டும் என்பதில் கவனமாக உள்ளது.
கோவையில் 'கொடிசியா' போன்று, ஈரோடு மாவட்டத்தில் 'டிரேடு சென்டர்' அமைக்க அறிவிப்பு செய்யப்பட்ட போதிலும், சரியான இடம் கிடைக்காததால் தாமதமாகி வருகிறது. விரைவில் இடம் தேர்வு செய்து, 'டிரேடு சென்டர்' அமைக்கப்படும். ஐ.டி., பார்க்க அமைப்பதற்கான இடமும் பிரச்னையாக உள்ளது. சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரியில் இடம் பார்த்தோம். அங்கு, 2 முக்கோணமாக உள்ளதால், சரியாக வரவில்லை.
ஈரோட்டில், 'பையர்ஸ் - செல்லர்ஸ் மீட்' நடத்த அனுமதி தந்துள்ளனர். விரைவில் அதற்கான முயற்சி மேற்கொண்டு நடத்தப்படும். இங்கு நடக்கும் தொழில் கண்காட்சிக்கும், அரசு மானியம் வழங்கி
உள்ளது.இவ்வாறு கூறினார்.