/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அமல அன்னை ஆலயத்தில் தேர்த்திருவிழா துவக்கம்
/
அமல அன்னை ஆலயத்தில் தேர்த்திருவிழா துவக்கம்
ADDED : டிச 03, 2024 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமல அன்னை ஆலயத்தில்
தேர்த்திருவிழா துவக்கம்
ஈரோடு, டிச. 2-
ஈரோட்டில் ஸ்டேட் பேங்க் சாலையில் உள்ள, புனித அமல அன்னை ஆலயத்தில், நடப்பாண்டு தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. பங்கு தந்தை ராயப்பன் தலைமையில், அமல அன்னை படத்துடன் கூடிய கொடியேற்றப்பட்டது. முன்னதாக சிறப்பு திருப்பலி நடந்தது. விழா முக்கிய நிகழ்வாக வரும், ௮ம் தேதி தேர்த்திருவிழா நடக்கிறது. அன்றைய தினம் காலையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டு, வேண்டுதல் தேர் எடுக்கப்படும்.