ஈரோட்டில் டெங்கு பாதிப்பு மூவர் மருத்துவமனையில் அனுமதி
ஈரோட்டில் டெங்கு பாதிப்பு மூவர் மருத்துவமனையில் அனுமதி
ADDED : ஆக 20, 2026 05:50 AM
ஈரோடு:ஈரோடு
மாநகராட்சி பகுதியில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மூன்று
பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று
வருகின்றனர்.
இதுகுறித்து, மாநகர நல அலுவலர் கவுரி சரவணன் கூறியதாவது:
ஈரோடு
மாநகராட்சி பகுதியில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை
தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, டெங்கு கொசு
உற்பத்தியாகாமல் தடுக்கும் வகையில், வீடு மற்றும் பொது இடங்களில்,
சுகாதார பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும்
வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தமாக பராமரிப்பது, மழைநீர்
தேங்காதவாறு பழைய பொருட்களை அப்புறப்படுத்துவது போன்ற பல்வேறு
விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணியில், 436
டெங்கு ஒழிப்பு பணியாளர், 60 மேற்பார்வையாளர், 20 சுகாதார ஆய்வாளர்
பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுதவிர, மாநகராட்சி
அதிகாரிகளுக்கு வார்டு வாரியாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த
இரண்டு மாதங்களில் மொத்தம், 6 பேருக்கு டெங்கு பாதிப்பு
ஏற்பட்டுள்ளது. இதில் மூவர் மருத்துவமனையில் சிகிச்சையில்
உள்ளனர். டெங்கு தடுப்பு பணிகள் துரிதமாக நடந்து வருவதால், காய்ச்சல்
பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.
