பா.ஜ., நிர்வாகியை கொல்ல முயன்ற வழக்கில் மேலும் மூன்று பேர் கைது
பா.ஜ., நிர்வாகியை கொல்ல முயன்ற வழக்கில் மேலும் மூன்று பேர் கைது
ADDED : செப் 27, 2026 06:46 AM
மொடக்குறிச்சி:எழுமாத்துார் மண்கரடு செல்வன் நகரை சேர்ந்தவர் பிரகாஷ், 44; பா.ஜ., நிர்வாகி. ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவரின் மனைவி சவிதா, 39; தம்பதிக்கு, 16 வயதில் மகள் உள்ளார்.
சவிதாவுக்கும், பா.ஜ.,வை சேர்ந்த ரெயின்போ கணபதிக்கும், 45, ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதை பிரகாஷ் கண்டிக்கவே, அவரை கொலை செய்ய தீர்மானித்தார். கடந்த, 21ம் தேதி இரவு காரில் சென்ற பிரகாஷை, ரெயின்போ கணபதி உள்ளிட்ட சிலர் வழிமறித்து கொல்ல முயன்றனர். தப்பித்த அவர் மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.
இதன் அடிப்படையில் ரெயின்போ கணபதி, டாடா சரவணன், 39, ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் விசாரித்ததில் சவிதாவையும் கைது செய்தனர். இதை தொடர்ந்து ரெயின்போ கணபதிக்கு கூலிப்படையாக வேலை செய்த மதுரையை சேர்ந்த கரண், 29; ஈரோட்டை சேர்ந்த மோகன்ராஜ், 24, பிரவீன், 28, ஆகியோரை கைது செய்தனர்.
