/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறுநீர் கழித்தவரை தாக்கிய மூன்று பேர் வழக்கு பதிவு
/
சிறுநீர் கழித்தவரை தாக்கிய மூன்று பேர் வழக்கு பதிவு
சிறுநீர் கழித்தவரை தாக்கிய மூன்று பேர் வழக்கு பதிவு
சிறுநீர் கழித்தவரை தாக்கிய மூன்று பேர் வழக்கு பதிவு
ADDED : நவ 23, 2025 01:20 AM
கோபி, கோபி அருகே ல.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் தனராஜ், 49, விவசாய கூலி தொழிலாளி; கடந்த, 19ல், வயலில் வேலை செய்தபோது விஷ பூச்சி கடித்தது. இதனால் கோபி அருகே நல்லகவுண்டம்பாளையத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றvார். கடந்த, 20ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மருத்துவமனையை விட்டு வெளியே வந்த தனராஜ், சாலையோரத்தில் சிறுநீர் கழிக்க சென்றார். அந்த சமயத்தில் அங்கு ஆம்புலன்ஸ் அருகே நின்றிருந்த ஐயப்ப பக்தர்கள் இருவர் உட்பட மூவர், சிறுநீர் கழிக்க கூடாது என தனராஜை திட்டியுள்ளனர்.
தனக்கு உடல்நிலை சரியில்லாததால் கழித்து விட்டதாக கூறியவர், மாலை அணிந்து கொண்டு கெட்ட வார்த்தை பேசலாமா? என கேட்டுள்ளார். மூவரும் சேர்ந்து தாக்கியதில் காயமடைந்த தனராஜ், கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின்படி, அஜீத், பூர்ண கார்த்தி உள்ளிட்ட மூவர் மீது, கோபி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

