/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
2 இடங்களில் ரேஷன் கடைகளை திறந்து வைத்த திருப்பூர் எம்.பி.,
/
2 இடங்களில் ரேஷன் கடைகளை திறந்து வைத்த திருப்பூர் எம்.பி.,
2 இடங்களில் ரேஷன் கடைகளை திறந்து வைத்த திருப்பூர் எம்.பி.,
2 இடங்களில் ரேஷன் கடைகளை திறந்து வைத்த திருப்பூர் எம்.பி.,
ADDED : செப் 27, 2024 01:22 AM
2 இடங்களில் ரேஷன் கடைகளை
திறந்து வைத்த திருப்பூர் எம்.பி.,
பெருந்துறை, செப். 27-
தேசிய நெடுஞ்சாலையில், -பெருந்துறை பகுதி புறவழி சாலையில் மேம்பாலங்கள் மற்றும் சர்வீஸ் ரோடு அமைக்கும் பணி நடக்கிறது. இவற்றை திருப்பூர் எம்.பி., சுப்பராயன் நேற்று ஆய்வு செய்தார். டெண்டர் விதிமுறைப்படி பணி நடக்கிறதா? என்பதை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து பெருந்துறையை அடுத்த திருவேங்கடம்பாளையத்தில், இ.கம்யூ., மூத்த தலைவர் நல்லப்பன் பெயரில் அமைக்கப்பட்ட சாலையின் பெயர் பலகையை திறந்து வைத்தார். எம்.பி., தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி திட்டத்தில், 13 லட்சம் ரூபாய் மதிப்பில், பெருந்துறை யூனியன் சின்ன வீரசங்கிலி, பெரிய வீரசங்கிலி கிராமங்களில் கட்டப்பட்ட ரேஷன் கடைகளை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வெங்கடாச்சலம், பெருந்துறை டவுன் பஞ்., தலைவர் ராஜேந்திரன், கருமாண்டிசெல்லிபாளையம் டவுன் பஞ்., தலைவர் செல்வன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து
கொண்டனர்.

